Friday, May 26, 2017

சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா

தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

தனது சினிமா அனுபவம் பற்றி கூறிய ஸ்ரீதிவ்யா…

“சினிமாவில் ஒரு படம் ஓடினால் பரபரப்பாக பேசுவார்கள். 2 படம் ஓடவில்லை என்றால் மார்க்கெட் அவுட் என்பார்கள். எனவே, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது.

சமீபத்தில் ஜீவாவுடன் நான் நடித்து வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘ஈட்டி’ படத்துக்கு பிறகு அதர்வாவுடன் நான் நடித்துள்ள ‘ஒத்தைக்கு ஒத்த’ படமும் வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன். மீண்டும் பட வாய்ப்புகள் என்னை தேடி வரும்.

தமிழ் சினிமாவில் பல முன்ணணி நாயகர்களுடன் நடித்துவிட்டேன். தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சூர்யா, தனுஷ் எனக்கு பிடித்தமான ஹீரோக்கள். எனவே, அவர்களுடன் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன்.

நான் சினிமாவில் காலடி வைத்த போது இத்தனை படங்களில் நடிப்பேன். இவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. என் வாழ்க்கை யில் நான் நினைக்காதது எல்லாமே நடக்கிறது” என்றார்.

0 comments:

Post a Comment