Monday, May 29, 2017

ரஜினி கட்சியில் லாரன்ஸ், ஆனந்தராஜ்?


ரஜினி கட்சியில் லாரன்ஸ், ஆனந்தராஜ்?



30 மே, 2017 - 11:00 IST






எழுத்தின் அளவு:








ரஜினி கட்சியில் சேர, நடிகர்கள் ஆனந்தராஜ், ராகவா லாரன்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 15ல் காமராஜர் பிறந்த நாள் வருகிறது. அன்று கட்சி அறிவிப்பை வெளியிடலாமா அல்லது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிவிக்கலாமா என, ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். மும்பைக்கு செல்லும் முன் ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி, நேரம் வரும் போது தெரிவிப்பேன் என, நிருபர்களிடம் கூறினார். அதனால், அவரது அரசியல் பிரவேசம் உறுதியாகியுள்ளது. இதையடுத்து நடிகர், நடிகையர், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மாதவன், பிரேம்ஜி, நட்ராஜ், நமீதா, மீனா போன்றவர்கள், ரஜினிக்கு ஆதரவு அளித்துள்ளனர். சமீபத்தில், நடிகர் ஆனந்தராஜ், ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது, ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயார் என, ஆனந்தராஜ் கூறியுள்ளதாக தெரிகிறது. ரஜினியும், காலா படப்பிடிப்பு முடிந்ததும், இருவரும் சந்தித்து பேசலாம் என கூறி உள்ளார்.

இதற்கிடையில், ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், லொள்ளு சபா ஜீவா ஆகியோரும், ரஜினி கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர் என, ரசிகர் மன்ற வட்டாரம் கூறியது.


0 comments:

Post a Comment