என் உயரம் எனக்கு தெரியும் - ஐஸ்வர்யா ராஜேஷ்
26 மே, 2017 - 10:58 IST
காக்கா முட்டை ஐஸ்வர்யா, தற்போது விக்ரம், தனுஷ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகியிருக்கிறார். அதேபோல் மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின்பாலி என அங்குள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சில நடிகைகளைப் போன்று தனது சம்பளமும் உயரவில்லை என்ற வருத்தத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அவரைக்கேட்டபோது, படத்தில் நடிப்பவர்களுக்கு சம்பளம் முக்கியம்தான். அதேசமயம் கதாபாத்திரங்கள் அதை விட ரொம்ப முக்கியம். சிறந்த கதாபாத்திரங்கள் தான் நம்மை உயரத்திற்கு கொண்டு செல்லும். காக்காமுட்டை படத்தில் நான் நடித்த வேடம்தான் என்னை இப்போது வரை பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் குறைவான சம்பளத்தில் தான் நடித்தேன். ஆனால் பெரிய பெயர் கிடைத்தது.
அந்தவகையில், இப்போதுவரை நான் சம்பளத்தை விட கதாபாத்திரங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். அதேசமயம், எனது உயரம் எனக்கு தெரியும். அதனால் அதற்கேற்ற சம்பளத்தை வாங்கவும் நான் தயங்குவதில்லை. தற்போது நான் நடித்து வரும் ஒரு படத்தில் எனக்கு முன்பு கமிட்டாகி விலகிய நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் நான் கமிட்டானபோது எனக்கு குறைந்த சம்பளம்தான் பேசினார்கள். இருப்பினும், அந்த படத்திற்கு பிறகு எனது சம்பளம் எகிறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதால் குறைவான சம்பளம் குறித்து பீல் பண்ணாமல் நடித்து வருகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
0 comments:
Post a Comment