Wednesday, May 24, 2017

‘இன்றைய அரசியல் சூழ்நிலை ரஜினிக்கு சாதகம்தான்…’ திருமாவளவன்


rajini thirumavalavanரஜினிகாந்த், தன் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதிலிருந்து, பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடகங்களில் நிலவி வருகிறது.


தனிக்கட்சி தொடங்கவிருக்கிறார். இல்லை அவர் பிஜேபியுடன் இணைவார் என பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள் மக்களிடையே உள்ளது.

இந்நிலையில் இன்றைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து திருமாவளவன் கூறியதாவது:

‘தமிழக அரசு ஓராண்டு காலமாக செயல்படவே இல்லை.

இரு அணிகளாக பிரிந்து கொண்டு, மோதி கொண்டு வருகின்றது.

ஆனால் இரண்டு பிரிவுகளும் பாஜக-வின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

தமிழக அரசை அவர்களால் தன்னிச்சையாக நடத்த முடியவில்லை. என்றார்.

மேலும் அவர் ரஜினியின் அரசியல் வருகை பற்றி பேசியதாவது…

‘இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது அவருக்கு சாதகமே.

ஆனால், பிஜேபி வட்டத்திற்குள் சிக்காமல் தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

தற்போது வைகோ ஜாமீனில் வந்துவிட்டார் வைகோ. அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்” என்றார்.

Current tamilnadu politics situation is clear route of Rajini says Thirumavalavan

0 comments:

Post a Comment