ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் தலைப்பிடப்பட்டு அந்த டிசைன் மட்டும் காலை 10 மணிக்கு இன்று வெளியானது.
இதனையடுத்து சில மணி நேரங்களில் காலா படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவேன் என தெரிவித்து இருந்தார் காலா படத்தயாரிப்பாளர் தனுஷ்.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இரண்டு விதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.
ஒரு போஸ்டரில் ரஜினி கோபத்துடன் கர்ஜிப்பது போல காணப்பட்டது.
அடுத்த போஸ்டரில் ஒரு ஜீப்பில் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கூலாக, கெத்தாக ரஜினி அமர்ந்திருப்பது போல ஒன்றும் வெளியானது.
இதன் பின்னணியில் மும்பை நகர சேரி பகுதிகள் இருப்பது போன்று டிசைன் அமைந்துள்ளது.
ஒரே நாளில் தலைப்பையும், அதனைத் தொடர்ந்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் தனுஷ் என்றே சொல்லலாம்.
Kaala producer Dhanush gave double treat for Rajinikanth fans
0 comments:
Post a Comment