ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படத்துக்கு ‘காலா’ என்ற தலைப்பு உறுதியாகி, படப்பிடிப்பும் மும்பையில் தொடங்கிவிட்டது. இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி என முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து பிரபலமாகி வருகின்றன. ‘காலா’ படத்திற்காக இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.
அதில், ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி ஒரு ஜீப்பின் மீது ஏறி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று வெளியிடப்பட்டது. ரஜினி அமர்ந்திருப்பது மகேந்திரா நிறுவனத்தின் ‘தார்’ என்ற மாடல் வகையை சேர்ந்த ஜீப் ஆகும்.
இந்த போஸ்டரை பார்த்த மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்க்யூட்டிவ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தார்’ ஜீப்பை ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்துவது குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே தனக்கு தெரியப்படுத்தவும். அந்த காரை நாங்கள் வாங்கி, எங்கள் நிறுவனத்தின் ஆட்டோ அருங்காட்சியகத்தில் வைக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தொடங்கும்போதே அவர் பயன்படுத்தும் காருக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது. இப்படத்தை தனுஷ் தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment