அஜித் கடந்த வந்து பாதையை சொல்லும் விவேகம் தீம் சாங்
25 மே,2017 - 09:56 IST
அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் வேலைகள் ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 'வீரம்', 'வேதாளம்' படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் இது. ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி விவேகம் படம் ரிலீசாகும் என்று சொல்லப்படுகிறது.
விவேகம் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது விவேகம் படத்தில் ஒரு தீம் சாங் இடம் பெற இருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசரில் 'Never Ever Give Up' என்று ஒரு பஞ்ச் வசனம் பேசியிருக்கிறார் அஜித்.
அஜித் ரசிகர்களிடையே இந்த வசனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக நம்பிய இயக்குநர் சிவா, இந்த பஞ்ச் வசனத்தை பின்னணியாக வைத்து தீம் சாங் ஒன்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த தீம் சாங்கை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.
அனிருத் இசையில் இந்த தீம் சாங் சிறப்பாக வந்திருப்பதாக சொல்கிறார்கள் விவேகம் படக்குழுவினர். அஜித்தின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை விவரிக்கும் வகையில் இந்த தீம் சாங் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
0 comments:
Post a Comment