Sunday, May 28, 2017

சினிமா ஹீரோ, ஹீரோயின்கள் சின்னத்திரை தொடர் ஹீரோ ஹீரோயின் ஆனார்கள்


சினிமா ஹீரோ, ஹீரோயின்கள் சின்னத்திரை தொடர் ஹீரோ ஹீரோயின் ஆனார்கள்



28 மே, 2017 - 13:28 IST






எழுத்தின் அளவு:








விஜய் டி.வியில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ராஜா ராணி. இது பணக்கார வீட்டுக்கு வேலைக்குச் சென்று அந்த வீட்டின் மருமகளாகி அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்தப் பெண் சமாளிப்பது மாதிரியான கதை. செம்பருத்தி, கார்த்தி என்ற இரு கேரக்டர்களை மையமாக கொண்டு காதலும், குடும்ப மோதலும் கலந்து உருவாகி வருகிறது. சரவணன் மீனாட்சி தொடரை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்குகிறார்.

இதில் செம்பருத்தியாக நடிப்பவர் ஆலியா மானசா. இவர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று வரை வந்தவர். சமீபத்தில் வெளியான ஜூலியும் 4 பேரும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். கதிராக நடிப்பார் திரைப்பட நடிகர் சஞ்சீவ். இவர் குளிர் 100 டிகிரி படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு நீயும் நானும், சகாக்கள், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு, உயிருக்கு உயிராக படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ஆங்கில படம் என்ற படம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் சஞ்சீவ்.


0 comments:

Post a Comment