தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளவர் நடிகர் பாலாஜி.
இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதிக்கு போர்ஷிகா என்ற ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவரது மனைவி, நித்யா நேற்று மாதவரம் போலீசில் கணவர் மீது திடீரென புகார் செய்துள்ளார்.
அந்த புகாரில் கணவர் தன்னை கொடுமை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment