Tuesday, May 23, 2017

‘ரஜினி வரக்கூடாது; தமிழ்நாட்டை நானே ஆளுவேன்..’ சீறிய சீமான்

Rajinikanth Seemanரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு, தமிழகத்தில் பெருமளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


திமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ரஜினியின் ஆதரவளித்து வருகின்றன.


ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தொடர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.


சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது…


தமிழ்நாட்டில் வாழ்ந்தால் ரஜினி தமிழராகிவிட முடியுமா?


மராட்டியத்தில் நாம் யாரேனும் வாழ்ந்தால் மராட்டியர் ஆகிட முடியுமா? என்ன பேசுறாரு ரஜினி?


ஆங்கிலேயர் இங்க வாழ்ந்தாங்க. இந்தியர்கள் ஆகிட்டாங்களா.?


என்னய்யா ஜனநாயகம். இது என் நாடு. என் வீடு. வீட்ல என்ன பிரச்சினை என்பது எனக்குதான் தெரியும்.


இவருக்கு என் முன்னோர் பத்தி என்ன தெரியும். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது.


அவரு நடிக்கட்டும். கோடி கோடியாய் சம்பாதிக்கட்டும்.


இது என் நாடு. இந்த நாட்டை நான்தான் ஆளுவேன்.” என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

0 comments:

Post a Comment