Sunday, May 28, 2017

‘கலைஞரின் வசனங்களை பேசுபவனே முழுமையான நடிகன்’ – கமல்

Karunanidhi Kamalhassanதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி அவர்கள் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது வைரவிழாவை கொண்டாடவிருக்கிறார்.


மேலும் 5 முறை தமிழத்தில் முதல்வராக அவர் இருந்துள்ளார்.


அவரின் 94வது பிறந்தநாள் (ஜீன் 3) இந்த விழா கொண்டாடப்பட உள்ளது.


இது குறித்து பல பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் கலைஞானி கமல்ஹாசன், கலைஞரை பற்றி தனது வாழ்த்து செய்தியை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது…


உனக்கு நீச்சல் தெரியுமா? என் கேட்டால் நீந்தி காட்டலாம். அதுபோல் உனக்கு நடிக்கத் தெரியுமா என கேட்டால், கருணாநிதியின் வசனங்களை தெளிவாக பேசி நடித்துக் காட்டி, தகுதியை நிரூபிக்கலாம்.


நான் நல்ல படங்கள் எடுத்த போதெல்லாம் அவரிடம் காண்பிப்பேன். அப்போது எங்கள் இருவரிடையே உறவு வலுத்தது.


அவரது கையால் கிள்ளுப்பட்ட கன்னம் எனது கன்னம். அவர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, தமிழறிஞர், சிறந்த வசனகர்த்தா.


எனக்கு தமிழ் கற்றுத் தந்த மூவரில் கருணாநிதியும் ஒருவர். எனது தமிழ் ஆசான்.


எங்களுடைய தொடர்பு அரசியல் தாண்டியது. என் உலகிற்குத் தேவையானது.


அவரை வாழ்த்த வயது தேவையில்லை, மனமிருந்தால்போதும். கலைஞர் வாழ்க.” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Kamalhassan wishes DMK Leader Karunanidhi

0 comments:

Post a Comment