Monday, May 29, 2017

தமிழில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்


தமிழில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்



29 மே, 2017 - 12:29 IST






எழுத்தின் அளவு:








தமிழில் தற்போது 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கிறது. பொழுதுபோக்கு, சினிமா, செய்தி, ஆன்மீகம், பழங்கால சினிமா, பாடல்கள், காமெடி ஆகியவற்றுக்கு தனித்தனி சேனல்கள் உள்ளது. அதேப்போல ஒவ்வொரு மதத்திற்கும் சேனல்கள் உள்ளது. கட்சிகளும் சேனல் தொடங்கி உள்ளது. ஆனால் விளையாட்டுக்கென்று தனி தமிழ் சேனல் கிடையாது.

தற்போது இந்த குறையை போக்க வந்திருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். உலகில் விளையாட்டு சேனல்களில் முன்னணியில் இருப்பது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல் நேற்று முதல் தமிழ் ஒளிபரப்பை துவங்கி இருக்கிறது. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த் தலைமையிலான அணியினர் இந்த சேனலை வழிநடத்த இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜியும் வர்ணணையாளராக பணியாற்ற இருக்கிறார்.

இந்த சேனலில் ஸ்டார் ஸ்போர்ட்சில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போதே தமிழ் வர்ணனையிலும் பார்க்கலாம். அதோடு உள்ளூர் விளையாட்டுக்கும் முக்கியத்தும் கொடுக்க இருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் நடக்கும் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.


0 comments:

Post a Comment