Wednesday, May 24, 2017

சீனு ராமசாமியுடன் கைகோர்க்கும் சசிகுமார்

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி.

இந்நிலையில், சமீபத்தில் சீனுராமசாமி, இயக்குனரும் நடிகருமான சசிகுமாரை சந்தித்துள்ளார். அவரிடம் ஒரு கதையையும் கூறியுள்ளாராம். அதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சீனுராமசாமி கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

சசிகுமாருக்கு சீனு ராமசாமி சொன்னது புதிய கதையா? அல்லது அவர் எடுத்து வரும் மாமனிதன் படத்தின் கதையா? என்பது தெரியவில்லை. ஒருவேளை ‘மாமனிதன்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் சசிகுமாரையும் நடிக்க வைக்க சீனுராமசாமி எதுவும் திட்டமிட்டிருக்கிறாரா? என்பது குறித்து தெரியவில்லை. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பலாம்.

0 comments:

Post a Comment