டியூப்லைட் டிரைலர் நாளை ரிலீஸ்
24 மே,2017 - 12:11 IST
சுல்தான் படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சல்மான் உடன் ஓம் புரி, சோகைல் கான் உள்ளிட்ட பலர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். கூடவே இன்னொரு முக்கியமான வேடத்தில் சீன நடிகை சூஜூ நடித்துள்ளார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை டியூப்லைட் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. முன்னதாக இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாக இருந்தது. ஆனால் சல்மான் படப்பிடிப்பிற்காக துபாய் சென்று இன்று தான் திரும்பியிருக்கிறார். ஆகையால் டிரைலர், நாளைக்கு தள்ளிப்போய் உள்ளது. டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment