Wednesday, May 24, 2017

மற்றுமொரு கெட்டப் சேஞ்சிற்கு தயாராகிறார் திலீப்..!


மற்றுமொரு கெட்டப் சேஞ்சிற்கு தயாராகிறார் திலீப்..!



24 மே,2017 - 17:03 IST






எழுத்தின் அளவு:








கெட்டப் மாற்றி நடிக்கும் விஷயத்தில் மலையாள சினிமாவின் கமல் என நடிகர் திலீப்பை தாராளமாக குறிப்பிடலாம். என்னதான் காமெடி கதைகளில் ஜனரஞ்சகமாக நடித்து வந்தாலும் கூட, பரிசோதனை முயற்சியாக படம் முழுக்க தோற்றத்தை மாற்றி நடிக்க வேண்டி இருந்தால் அதற்கும் திலீப் தயங்குவது இல்லை. அப்படி அவர் தன்னை நிரூபித்த படங்கள் நிறைய உண்டு. சாந்துப்பொட்டு படத்தில் பெண் தன்மை கொண்ட ஆணாக, குஞ்சுக்கூனன் படத்தில் கூன் விழுந்த முதுகுடன், பச்சகுதிர, சவுன்ட் தோமா படத்தில் மேலண்ணம் குறைபாடு கொண்டவராக நடித்துள்ளார்.

அவ்வளவு ஏன் மாயமோகினி படத்தில் முக்கால்வாசி நேரம் பெண் வேடம் என படத்துக்குப்படம் விதவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள திலீப் தற்போது 'கம்மார சம்பவம்' படத்தில் கூட 90 வயது கிழவராக நடித்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி, தனது நண்பர் நாதிர்ஷா இயக்கம் புதிய படத்தில் இவர் 'அப்பு' கமல் போல குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இது மம்முட்டிக்காக முதலில் உருவாக்கப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment