Tuesday, May 30, 2017

விஜய்யிடம் நித்யாமேனனுக்கு பிடித்த விசயம்!


விஜய்யிடம் நித்யாமேனனுக்கு பிடித்த விசயம்!



30 மே, 2017 - 14:58 IST






எழுத்தின் அளவு:








மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு பேசப்படும் நாயகியானவர் நித்யாமேனன். பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட நடிகர் சுதீப் நடித்த முடிஞ்சா இவனை புடி, விக்ரமுடன் இருமுகன் படங்களிலும் நடித்தார். அதையடுத்து இப்போது விஜய்யின் 61-வது படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நித்யாமேனன். இந்த வேடத்தில் முதலில் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. அவர் படப்பிடிப்பு தொடங்கியபோது விலகிக்கொண்டதால் நித்யாமேனன் கமிட்டானார்.

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே நித்யாமேனனின் பெயரையும் டிரன்டிங் செய்யத் தொடங்கி விட்டார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், விஜய்-61 படத்தில் விஜய்யுடன் நடித்தது பற்றி நித்யாமேனன் கூறுகையில், விஜய்யிடம் எனக்கு பிடித்த முதல் விசயம் அவரது அமைதிதான். ஸ்பாட்டில் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட விசயங்களைப்பற்றி மட்டுமே பேசுவார். அந்த கதாபாத்திரத்தின் பீலுடன் அமர்ந்திருப்பவர், நம்மையும் படத்தின் கதாபாத்திரமாக மட்டுமே கருதுவார். அது விஜய் படத்தில் நடித்தபோது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது என்கிறார்


0 comments:

Post a Comment