Wednesday, May 31, 2017

சிம்பு பட விநியோகம் மிகச்சிறப்பு; தயாரிப்பாளர் மகிழ்ச்சி


simbu AAA movieஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க, யுவன் இசையமைக்க உருவாகியுள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.


இதில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா, சனாகான், நீது சந்திரா உள்ளிட்ட நான்கு நாயகிகள் நடிக்க, மைக்கேல் ராயப்பன் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரித்து வருகிறார்.

இதன் முதல் பாகத்தை மட்டும் வருகிற ஜூன் 23-ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த பாகத்தில் சிம்புவின் அறிமுக பாடல் படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளதால், அதனை நாளை முதல் சென்னையில் படமாக்கவிருக்கிறார்களாம்

இந்நிலையில், இப்படத்தின் முழு வியாபாரமும் (கோயம்புத்தூர் உரிமையை தவிர), தற்போதே மிகச்சிறப்பாக நல்ல விலைக்கு முடிந்து விட்டதாம்.

இதனால் பெருமகிழ்ச்சியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

Producer Michael Rayappan happy by his movie AAA trade deals

0 comments:

Post a Comment