Saturday, May 27, 2017

ஜூன் மாதத்திலும் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ்


ஜூன் மாதத்திலும் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ்



27 மே, 2017 - 18:14 IST






எழுத்தின் அளவு:








ஒவ்வொரு வாரமும் அரை டஜன் படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் யாருக்கு என்ன பயன் என்பது ஒரு பக்கம் இருக்க, படங்களின் வருகை வாரத்துக்கு வாரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூன் 2-ஆம் தேதி 'நட்டி' நட்ராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் 'போங்கு', சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த், ரவீனா ராய் முக்கிய வேடங்களில் நடிக்க, ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு' , 'சாட்டை' படநாயகன் யுவன் கதாநாயகனாக நடித்திருக்கும் 'விளையாட்டு ஆரம்பம்', பி.வாசுவின் மகன் சக்தி வாசு, நிகிஷா பட்டேல் இணைந்து நடித்திருக்கும் '7 நாட்கள்' ஆகிய படங்கள் ரிலீசாகவிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இவற்றில் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ள படம் 'ஒரு கிடாயின் கருணை மனு', சதுரங்க வேட்டை டைப்பில் எடுக்கப்பட் படம் போங்கு. லென்ஸ் படத்தின் சாயலில் எடுக்கப்பட்டுள்ள படம் விளையாட்டு ஆரம்பம்.

தொடர்ந்து ஜூன் 9 ஆம் தேதி விக்ரம் பிரபு நடித்த 'சத்ரியன்' படம் ரிலீசாகிறது. மோகன்லால் நடிப்பில் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள 'புலிமுருகன்' படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதற்கு அடுத்த வாரம் அதாவது 23-ஆம் தேதி சிம்புவின் 'அன்பானவன், அசராதவன் அடங்காதவன்', செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணி அமைத்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' மற்றும் 'ஜெயம்' ரவி, ஏ.எல்.விஜய் காம்பினேஷனில் உருவாகியுள்ள 'வனமகன்' ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன.

இந்த படங்கள் தவிர இன்பசேகர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள 'அதாகப்பட்ட மகாஜனங்களே', உதயசங்கர் இயக்கத்தில் அப்புக்குட்டி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் 'கொஞ்சம் கொஞ்சம்' ஆகிய படங்களும் ஜூன் மாதம் வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான தியேட்டர்கள் கிடைக்காமலும், வேறு காரணங்களாலும் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகவும், புதிதாக சில படங்கள் ரிலீஸ் களத்தில் குதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.


0 comments:

Post a Comment