Friday, May 26, 2017

‘ரஜினிக்கு அரசியல் ஆதரவு-ஆலோசனை வழங்குவீர்களா..?’ கமல் பேட்டி


rajini kamalமுதன்முறையாக பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார் கமல்.


இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சற்றுமுன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை டிடி என்ற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி பற்றி பேசியபின் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கமல் பதிலளித்தார்.

அவர் கூறியதாவது…

நான் ஓட்டுப் போட தொடங்கிய 21 வயது முதலே அரசியலில் இருக்கிறேன்.

ஆனால் போட்டி போடும் அரசியலில் இல்லாமல், வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் மக்களில் ஒருவனாக இருந்து வருகிறேன்.

ரஜினிகாந்த் சொன்னதுபோல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்பது உண்மைதான்.

தற்போது உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருக்கின்றனர்.

சேவை மனப்பான்மை இல்லை. நடிகர் என்றில்லை அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

ரஜினிக்கு ஆதரவோ, ஆலோசனையோ இருந்தால் வழங்குவேன். ஆனால் அதை உங்கள் முன் வழங்கமுடியாதே. நான் அவரிடம் தனியாக சொல்வேன்” என்றார்.

Will Kamalhassan support Rajinikanth in Politics

0 comments:

Post a Comment