இஸ்கியா 3 ல் நடிக்க விருப்பம் : அர்ஷத் வர்ஷி
28 மே, 2017 - 14:47 IST
பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்ஷி, கோல்மால் அகைன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்ட தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், இஸ்கியா 3 படத்தில் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அர்ஷத், அதில் நடிக்க நான் விரும்புகிறேன். ஒருவேளை டைரக்டர் அபிஷேக் சவ்பே, நசீருதீன் ஷாவையும் என்னையும் வைத்து இஸ்கியா 3 படத்தை எடுத்தால் நான் நடிக்க விரும்புகிறேன். அது மிகப் பெரிய வாய்ப்பு. நல்ல கதை, இசை கொண்ட படம். என்ன நடக்கும் என எனக்கு தெரியாது. எங்களுக்கு என்ன வயதானால் என்ன என்னால் அதை பண்ண முடியும் என நினைக்கிறேன். படங்களில் நடிக்க மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment