தொகுப்பாளர்களுக்கு பெருமை சேர்த்த கமல்: திவ்யதர்ஷினி
27 மே, 2017 - 14:14 IST
இந்தியில் வெளியாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் புதிய வடிவத்தில் ஒளிபரப்பாக உள்ளது. 14 பிரபலங்கள், 30 கேமரா கண்காணிப்புகளுடன் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கியிருக்கப்போகிறார்கள். அவர்களில் வெற்றி பெறும் நபருக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் முதன்முதலாக சின்னத்திரைக்கு வருகிறார் கமல்ஹாசன். இதுசம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது, இந்த நிகழ்ச்சி எனக்கு பிடித்திருந்ததால் தொகுத்து வழங்க ஒத்துக் கொண்டேன். இந்தியில் இருந்து இது மாறுபட்ட கோணத்தில் படமாகிறது. அதேசமயம், இதில் கலந்து கொள்ளும் 14 பிரபலங்கள் யார் யார் என்பது எனக்கும் தெரியாது. அவர்களுடன் நான் மட்டுமே வாரந்தோறும் பேசப்போகிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த விசயங்களையும் கமல் அதை தொகுத்து வழங்குவது பற்றியும் பேசியவர், இதுவரை தொகுப்பாளர்கள் என்பது சாதாரணமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் இப்போது கமல் சாரே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் என்னைப்போன்ற தொகுப்பாளர்களுக்கு பெருமை சேர்ந்துள்ளது. இனிமேல் தொகுப்பாளர் என்பதை நாங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். அதற்காக கமல் சாருக்கு பெரிய நன்றி சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் பேசினார் டிடி.
0 comments:
Post a Comment