Sunday, May 28, 2017

மீண்டும் ஹீரோயின் ஆன நமீதா


மீண்டும் ஹீரோயின் ஆன நமீதா



28 மே, 2017 - 13:03 IST






எழுத்தின் அளவு:








எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமான நமீதா ஏய் மற்றும் இங்கிலீஸ்காரன் படங்கள் மூலம் கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். ஒரு கட்டத்தில் நமீதாவின் கவர்ச்சி ரசிகர்களுக்கு சலிப்புத்தட்டவே பட வாய்ப்புகள் குறைந்தது. கடந்த ஆண்டு இளமை ஊஞ்சல் என்ற படத்திலும், புலிமுருகன் மலையாளப் படத்திலும் நடித்தார் இரண்டிலுமே அவர் ஹீரோயின் இல்லை.

இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மியா என்ற திகில் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேத்யூ ஸ்கேரியா, ஆர்.எல்.ரவி ஆகியோர் இணைந்து இயக்கும் இந்தப் படத்தில் நமீதாவுடன் சோனியா அகர்வால், வீரா, பேபி இலா ஆகியோரும் நடிக்கிறார்கள். ரெஜிமோன் இசை அமைக்கிறார், ரவி சுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர்கள் கூறியதாவது

மியா மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் - மனைவில் பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டது கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளோம்.

பெரும்பாலன காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில் படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் வெளியாகும் என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள்.


0 comments:

Post a Comment