ஸ்ருதியின் நடிப்பு, இசைத் திறமை கண்டு வியந்தேன்: ஆங்கில எழுத்தாளர் புகழாரம்
24 மே,2017 - 11:07 IST
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த ஆங்கில எழுத்தாளர் நீல் கெய்மென். அவரது புத்தகங்களை விரும்பி படிக்கிறவர். சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு சென்ற ஸ்ருதிஹாசன் அங்கு தனக்கு பிடித்த எழுத்தாளர் நீல் கெய்மெனை சந்தித்தார். ஸ்ருதியும், நீல் கெய்மனும் ஏற்கெனவே பேஸ்புக் நண்பர்கள் என்பதால் தனது படமான ஹவ் டு டாக் டூ கேர்ள் என்ற படத்தை பார்க்க வருமாறு நீல் கெய்மென் ஸ்ருதியை அழைத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில் ஸ்ருதி படம் பார்க்க சென்றதோடு தனது அபிமான எழுத்தாளரையும் சந்தித்தார்.
இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் கூறும்போது "இந்த படத்திற்காக அழைக்கப்பட்டேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீல் எனக்கு பிடித்த எழுத்தாளர் மற்றும் நான் அந்த படத்தையும் நேசிக்கிறேன்" என்றார்.
ஸ்ருதியை சந்தித்தது பற்றி நீல் கூறியிருப்பதாவது "முதலில் நாங்கள் ஒருவருக்கொருவர் டுவிட்டரில் எதிர்கொண்டோம், நான் இந்தியாவைச் பார்க்க விரும்பியதைக் குறிப்பிட்டேன், ஸ்ருதி உதவ முன்வந்தார். அவர் என்னுடைய ஒரு பெரிய ரசிகர், பல திரைப்படங்கள் மற்றும் இசையில் அவரது திறமையை நான் பார்த்து வியந்தேன். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் அவரது இசை குறிப்பிடத்தக்கது. அவருக்காக புத்தகங்கள் அனுப்பபி வைத்தேன்" என்றார்.
0 comments:
Post a Comment