தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது.
அதுபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச ஆட்சி வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள அரசுக்கு அனுப்பியுள்ள இமெயில் ஒன்றின் மூலம் ஓராண்டு ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது… ‘ கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன்.
கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை கேரள அரசு வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment