Tuesday, May 30, 2017

ஜூன் 22-ஆம் தேதி விஜய் 61 படத்தின் டைட்டில் அறிவிப்பு


ஜூன் 22-ஆம் தேதி விஜய் 61 படத்தின் டைட்டில் அறிவிப்பு



30 மே, 2017 - 18:15 IST






எழுத்தின் அளவு:








'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், அட்லி மீண்டும் இணைந்துள்ள விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக ஐரோப்பாவில் நடந்து வந்தது. ஐரோப்பாவில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விரைவில் படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர்.

'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் 100-வது படமான இப்படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கடைசி வாரத்தில் சென்னையில் துவங்கவிருக்கிறது. இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 -ஆம் தேதி வெளியிட உள்ளனர் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


0 comments:

Post a Comment