'புலி முருகன்' பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பிருத்விராஜின் 'தியான்'..!
24 மே,2017 - 16:57 IST
மலையாளத்தில் மீண்டும் ஒரு பிரமாண்டமான படமாக உருவாகி இருக்கிறது 'தியான்' என்கிற படம். பிருத்விராஜ், இந்திரஜித் சகோதரர்கள் இருவரும் 12வது முறையாக மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள். நடிகரும், கதாசிரியருமான முரளி கோபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இந்தப்படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் வட இந்தியாவை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிருத்விராஜ், அஸ்லான் முகமது என்கிற கேரக்டரிலும் இந்திரஜித், பட்டாபிராமன் என்கிற கேரக்டரிலும் நடித்துள்ளார்கள்.
“ஒரு மனிதனை நம்பமுடியாத அதிசயம் ஒன்று சந்திக்கும்போது அங்கே வரலாற்றுக்காவியம் பிறக்கிறது” என்கிற டேக்லைனுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களிலும் மற்றவை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிகப்பெரிய செட்டுகள் அமைக்கப்படும் படமாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மோகன்லாலின் 'புலி முருகன்' படத்திற்கு செலவான 25 கோடி ரூபாய் தான் இந்தப்படத்திற்கும் செலவாகி இருக்கிறது என சொல்லப்படுகிறது. மலையாள சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்து வரும் தைரியத்தில் தான் இந்தப்படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது... அனேகமாக ஈத் பண்டிகை கொண்டாட்டமாக இந்தப்படம் ரிலீசாகும் என தெரிகிறது.
0 comments:
Post a Comment