'பாகுபலி 2' இந்தியாவில் மட்டும் நிகர வசூல் 1000 கோடி
27 மே, 2017 - 11:45 IST
'பாகுபலி 2' படம் வெளிவந்த நாளிலில் இருந்தே பல புதிய வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. 100 கோடி, 500 கோடி, 1000 கோடி, 1500 கோடி என தாண்டி 2000 கோடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள மேலும் பல நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளது. குறிப்பான சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இப்படம் வெளியானால் இன்னும் வசூல் தொகை அதிகமாக வாய்ப்புள்ளது.
இதனிடையே, இந்தியாவில் மட்டும் நான்கு வார முடிவில் இப்படம் நிகர வசூலாக 1000 கோடியைத் தாண்டி மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. டோலிவுட் வட்டார தகவல்படி, “ஆந்திரா, தெலுங்கானா - 263 கோடி, தமிழ்நாடு - 104 கோடி, கர்நாடகா - 88 கோடி, கேரளா - 54 கோடி, இந்தியாவின் பிற மாநிலங்களில் 495 கோடி” என வசூலித்துள்ளது. மொத்த வசூலான 1280 கோடியில் பங்குத் தொகையாக 605 ரூபாயை வசூலித்துக் கொடுத்துள்ளது.
இந்தியத் திரையுலகில் இதுவரை வேறு எந்த ஒரு படமும் செய்யாத ஒரு வசூல் சாதனையைப் படைத்துள்ள 'பாகுபலி 2' மேலும் ஒரு வாரம் ஓடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment