Monday, May 29, 2017

ஜுன் 1 முதல் 'விவேகம்' டப்பிங் ஆரம்பம்


ஜுன் 1 முதல் 'விவேகம்' டப்பிங் ஆரம்பம்



29 மே, 2017 - 18:02 IST






எழுத்தின் அளவு:








சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'விவேகம்'. இப்படத்தின் டீசர் மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டீசர் விரைவில் 14 மில்லியன் பார்வையையும், 4 லட்சம் லைக்குகளையும் தொட உள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக பல்கேரியா நாட்டில் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சில விடுபட்ட காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாம்.

ஜுன் 1ம் தேதி முதல் 'விவேகம்' படத்திற்கான டப்பிங் பணிகள் ஆரம்பமாக உள்ளன. இதனிடையே இப்படத்தை வாங்குவதற்கு வினியோகஸ்தர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் டீசரைப் பார்த்ததும் வினியோகஸ்தர்களிடம் ஏற்பட்டுள்ளது.

படத்தின் டீசர் 'கபாலி' டீசரை மிஞ்சியுள்ள நிலையில் இப்படத்தின் வியாபாரமும், வசூலும் அதைவிடப் பெரிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


0 comments:

Post a Comment