கெளதம் கார்த்திக், சனா, லாலு, பிரசாந்த் நாயர், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ரங்கூன்.
இப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.
இவரிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இதில் விக்ரம் என்பவர் ஜி.வி.பிரகாஷின் உதவியாளராக இருந்தவர்.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ இல்லாத ஆகாயம்’ என்ற சிங்கிள் பாடலை நாளை சிம்பு வெளியிட உள்ளார்.
இதற்கு முன்பு, ஃபாரின் ரிட்டர்ன் என்ற பாடலை அனிருத் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment