10 மில்லியன் பார்வையைக் கடந்த 'சாஹோ' டீசர்
28 மே, 2017 - 12:11 IST
'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆகிவிட்டார். அந்தப் பெருமையை அவர் அடுத்தடுத்து வரும் படங்களில் தக்க வைத்துக் கொண்டால் அவருக்கென ஒரு தனி இடம் கிடைத்துவிடும்.
'பாகுபலி 2' படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள 'சாஹோ' படத்தின் டீசரை வெளியிட்டார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாகச் சொல்லப்படும் 'சாஹோ' டீசர் இந்த ஒரு மாதத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் மூலம் பிரபாஸுக்கு உள்ள வரவேற்பு எப்படி என்பது புரிந்திருக்கும்.
'சாஹோ' தெலுங்கு டீசருக்கு 1 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது. ஹிந்தி டீசர் 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் டீசருக்கு 7 லட்சம் பார்வையும், மலையாள டீசருக்கு 2 லட்சம் பார்வையும் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஏற்கெனவே 350 கோடி ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக உள்ளது. மேலும் பிரபாஸ் இந்தப் படத்திற்காக தனியாக சம்பளம் எதையும் பெறப் போவதில்லை என்றும், லாபத்தில் பங்கை எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 'சாஹோ' படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.
0 comments:
Post a Comment