Thursday, May 25, 2017

மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு கர்ப்பமான செலினா ஜெட்லி


மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு கர்ப்பமான செலினா ஜெட்லி



25 மே,2017 - 16:07 IST






எழுத்தின் அளவு:








நடிகை செலினா ஜெட்லி ஏற்கனவே இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இப்போது மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். 2001-ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் நடிகை செலினா ஜெட்லி. நோ என்ட்ரி, ஜவானி திவானி, கோல்மால் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஹோட்டல் அதிபர் பீட்டர் ஹேக் என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012-ம் ஆண்டு வின்ஸ்டன், விராஜ் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். சினிமாவை சற்று ஒதுங்கியுள்ள செலினா, இப்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்தமுறையும் செலினா இரட்டை குழந்தைக்கு தாயாக உள்ளார். இதனால் செலினா, பீட்டர் இருவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இதுகுறித்து செலினா ஜெட்லி கூறியிருப்பதாவது... "நான் கர்ப்பமாக இருக்கிறேன். டாக்டர் என்னை பரிசோதித்தார், அப்போது என் கணவர், டாக்டரிடம் யதார்த்தமாக என்ன டாக்டர் இந்தமுறையும் இரட்டை குழந்தைகளா...? என்று கேட்டார், டாக்டரும் ஆமாம் என்றார். இதைகேட்டு நானும், எனது கணவரும் முதலில் அதிர்ச்சியானோம். அதேசமயம், மிகுந்த மகிழ்ச்சியிலும் உள்ளோம். எங்கள் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை, அக்டோபரில் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment