விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடிக்க தீபிகா ஆர்வம்
24 மே,2017 - 12:22 IST
இசையமைப்பாளராக இருந்து இயக்குநரானவர் விஷால் பரத்வாஜ். ஹைடர், ரங்கூன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர், இப்போது இர்பான்கான் - தீபிகா படுகோனையை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஹனி டிரகன் இயக்குகிறார். இது ஒரு கேங்ஸ்டர் படம். தீபிகா, மாபியா குயின் சப்னா தீதி ரோலிலும், இர்பான் கான், இன்னொரு கேங்ஸ்டராகவும் நடிக்க உள்ளனர்.
விஷால் பரத்வாஜ் படத்தில் நடிப்பது பற்றி தீபிகா படுகோனே கூறியிருப்பதாவது... "விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் இதுவரை நான் நடிக்கவில்லை. ஆகையால் அவரை பற்றி நான் அதிகம் பேச முடியாது. ஆனால் ஒரு ரசிகையாக அவர் இயக்கிய படங்களை மிகவும் ரசிக்கிறேன். ஒரு நடிகையாக அவரது படத்தில் நடிக்க அதிகம் விரும்புகிறேன். மேலும் அவரது படத்தில் நடிக்க ஆர்வமாகவும் உள்ளது, அதோடு கொஞ்சம் சவாலாகவும் உள்ளது" என்கிறார்.
0 comments:
Post a Comment