பாகுபலி படத்தை போல், மிகப்பிரம்மண்டாக சங்கமித்ரா படத்தை உருவாக்க இருக்கிறார் சுந்தர் சி.
இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.
இப்படக்குழுவினர் அண்மையில் கான்ஸ் திரைப்பட விழாவில் கூட கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் இருக்கிறாராம்.
பெரிய படம், இரண்டு வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.
தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.
படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார்.
ஆனால், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தாம்.
முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை என்றும் படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவே விலகலுக்கான காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார்.
தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்துக்காக தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.
Shrutihaasan walks out of Sundar Cs epic Sangamithra
0 comments:
Post a Comment