Sunday, May 28, 2017

ரஜினியுடன் கைகோர்க்கும் தேசிய விருது வென்ற நால்வர்


Four National award winners joins with Rajini in Kaala movie


ரஜினிகாந்த் நடிக்கவுள்ள, காலா படத்தின் சூட்டிங் இன்று முதல் மும்பையில் தொடங்கியுள்ளது.

இதில் ரஜினி மற்றும் சமுத்திரக்கனி காட்சிகளை இன்று படமாக்கவிருக்கிறாராம் இயக்குனர் ரஞ்சித்.

இதன் தலைப்பு வெளியானது முதல், இப்படத்தின் தகவல்கள் ரசிகர்களால் அதிகம் தேடப்படும் விஷயமாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் தேசிய விருதை வென்றவர்கள் நான்கு பேர் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

இப்படத்தை தயாரிக்கும் தனுஷ், ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் காக்கா முட்டை, விசாரணை ஆகிய தேசிய விருது பெற்ற படங்களையும் தனுஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விசாரணை படத்திற்காக சமுத்திரக்கனியும், படத்தின் 2வது நாயகி அஞ்சலி படேல் தெலுங்கில் ‘நா பாங்காரு தல்லி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளனர்.

இதன் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் 7 முறை தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Four National award winners joins with Rajini in Kaala movie

0 comments:

Post a Comment