சந்தீப்கிஷனுக்கு ஜோடியான தமன்னா!
29 மே, 2017 - 08:09 IST
தமிழில், யாருடா மகேஷ், மாநகரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் சந்தீப் கிஷன். தற்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் மாயவன், சுசீந்திரன் இயக்கும் அறம் செய்து பழகு ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் அடுத்தபடியாக ஹம்தும், தெறி மேரி கஹானி உள்பட பல இந்திப் படங்களை இயக்கிய குணால் கோஹ்லி இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இதற்கு முன்பு தெலுங்கில் ரொமான்டிக் கதைகளில் நடித்துள்ள சந்தீப் கிஷனை இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக்குகிறாராம் குணால் கோஹ்லி. இப்படத்தில் நாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது ஸ்கெட்ச், கொலையுதிர்காலம் இந்தி பதிப்பில் நடித்து வரும் தமன்னா, அந்த படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் நடை பெறுகிறது. சச்சின் ஜோஷி இப்படத்தை தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment