Tuesday, May 30, 2017

சல்மான்-கத்ரீனாவை இயக்க விரும்பும் கரண் ஜோகர்


சல்மான்-கத்ரீனாவை இயக்க விரும்பும் கரண் ஜோகர்



30 மே, 2017 - 14:04 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவர் சல்மான் - கத்ரீனாவை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறார். சல்மான்-கத்ரீனா இடையேயான கெமஸ்ட்ரி அவ்வளவு அருமையாக இருப்பதாகவும், ஆகையால் இவர்கள் இருவரையும் மையப்படுத்தி ஒரு கதையை கரண் எழுதி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சல்மான்-கத்ரீனா ஜோடி ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு இந்தியாவிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடந்தது. டைகர் ஜிந்தா ஹே படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாக இருக்கிறது.


0 comments:

Post a Comment