நேற்று முன்தினம் சுந்தர்.சி இயக்கும் சரித்திர படமான ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக தகவல் வெளியானது.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஸ்ருதிஹாசன் விலகியதாக அவரது தரப்பில் இருந்து, ஓர் அறிக்கையும் வெளியானது.
இதனையடுத்து, அவர் விலகவில்லை. நாங்கள்தான் அவரை வெளியேற்றினோம்’ என்று தயாரிப்பு தரப்பு கூறியதாக தகவல் வெளியானது.
தற்போது இந்த அறிக்கை குறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் கூறியிருப்பதாவது, “ஸ்ருதிஹாசன் விலகியது குறித்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இந்த படத்தின் நிறுவனமும் எந்த வித அறிக்கையும் அறிவிக்கவில்லை.
இதுகுறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்தி”என்று தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment