Thursday, May 25, 2017

காலா பர்ஸ்ட் லுக்கால் விஜய்-அஜித்-சூர்யாவுக்கு வந்த ப்ராப்ளம்..?

Ajith Vijay Suriyaரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரித்து ரஞ்சித் இயக்கவுள்ள படத்திற்கு காலா என்று தலைப்பிட்டுள்ளனர்.


இதன் சூட்டிங் தொடங்க இன்னும் 3 தினங்கள் இருக்கும் நிலையில் ஜீன் 25ஆம் தேதி இதன் தலைப்பையும் பர்ஸ்ட் லுக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.


இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதனால் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களிடமும் இயக்குனர்களிடமும் ஒரு சில கேள்விகளை கேட்டு வருகின்றனர்.


அதாவது… இன்னும் சூட்டிங்கே தொடங்காத சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பை அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு விட்டார்கள்.


ஆனால், நீங்கள் படத்தின் சூட்டிங் முடியும் வரை எங்களை காக்க வைக்கிறீர்களே?


அவர்கள் நடித்து வரும் படங்களின் எண்ணிக்கையை வைத்தே அழைக்க வேண்டியதாக உள்ளது. இது நியாயமா? என சமூக வலைத்தளங்களில் தங்கள் கேள்வியை பதிவிட்டு வருகின்றனர்.


விவேகம் படத்தின் சூட்டிங் பாதி முடிவடைந்த நிலையிலே அதன் டைட்டில் வெளியானது.


அட்லி இயக்கி வரும் விஜய் படத்திற்கும் இன்னும் பெயரிப்படவில்லை.


அதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தலைப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.


இதன் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.


Vijay Ajith Suriya fans request Actors to announce title before shooting starts

0 comments:

Post a Comment