ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை
25 மே,2017 - 13:14 IST
மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் உடனடியாக நீக்கப்படுவர் என நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என சில மாவட்டங்களில் ரசிகர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் மீது புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நடிகர் ரஜினி, தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது... "அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும், இக்கடிதம் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்து கொண்டால், அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்".
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment