Thursday, May 25, 2017

தொண்டன் விமர்சனம்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, சுனைனா, விக்ராந்த், அர்த்தனா, தம்பிராமையா, சூரி, கஞ்சா கருப்பு, வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், சவுந்திர ராஜா மற்றும் பலர்.
இயக்கம் : சமுத்திரக்கனி
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவாளர் : ஏகாம்பரம், ரிச்சர்ட் நாதன்,
எடிட்டர்: ஏஎல் ரமேஷ்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : மணிகன்டன்


Thondan-Press-Meet-Stills


கதைக்களம்…


சமுத்திரக்கனி, விக்ராந்த், கஞ்சா கருப்பு ஆகியோர் ஆம்புலன்ஸில் பணி புரிகின்றனர்.


அதே கிராமத்தில் பணிபுரியும் ஆசிரியை சுனைனா, சமுத்திரக்கனியை காதலிக்க, சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனா விக்ராந்தை காதலிக்கிறார்.


ஒரு முறை நாமோ நாராயணனின் தம்பி சௌந்தரராஜாவை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது, அவர் இறக்க நேரிடுகிறது.


முன்விரோதம் காரணமாக சமுத்திரக்கனி இப்படி செய்துவிட்டார், என நமோ நாராயணன் போலீசில் புகார் கொடுக்கிறார்.


மேலும், தான் கொல்லும் ஆட்களை எல்லாம், சமுத்திரக்கனி தன் ஆம்புலன்ஸில் வேகமாக கொண்டு சென்று காப்பாற்றும் சமுத்திரக்கனியின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்.


அவரின் சதித்திட்டங்களை எப்படி ஹீரோ முறியடித்தார்? என்பதை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இந்த தொண்டன்.


thondan paiyan
கேரக்டர்கள்…


தனக்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை உருவாக்கி, அதில் தன்னை நன்றாகவே பொருத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.


தன்னால் முடிந்தவரை எவ்வளவு முடியுமோ அந்தளவு சமூக அவலங்களை சாடியிருக்கிறார். வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை அனைத்தையும் தொட்டு இருக்கிறார்.


80க்கும் மேற்பட்ட காளைகள் பெயரை சொல்லும் காட்சிகள் மெய்சிலிர்க்கும்.


சுனைனா அழகாக அம்சமாக வருகிறார். கருவில் இருக்கும் குழந்தை இறக்கும் காட்சியில் தாய்மைக்கான வலியை வெளிப்படுத்தியுள்ளார்.


அறிமுக நாயகி அர்த்தனா நிறையவே ஸ்கோர் செய்கிறார். தங்கை, காதலி, கல்லூரியில் படிக்கும் பெண் என அனைத்திலும் ஜொலிக்கிறார்.


இரண்டாவது ஹீரோவாக விக்ராந்த். தனக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்.


ஆனால் முகத்தை எப்போதுமே சீரியஸாகவே வைத்திருக்கிறாரே? அது ஏன் ப்ரோ? கொஞ்சம் சிரிக்கலாமே பாஸ்.


இவர்களுடன் நமோ நாராயணன், கஞ்சா கருப்பு, ஞானசம்பந்தன், வேல ராமமூர்த்தி, சவுந்திர ராஜா, நஷாத் ஆகியோர் நிறைவாக செய்துள்ளனர்.


10 நிமிடங்கள் மட்டுமே வரும் சூரி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் சீரியஸ் படத்தை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைக்கின்றனர்.


Thondan-Movie-photos


தொழில்நுட்ப கலைஞர்கள்…


பெரும்பாலும் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் பெரிதாக பாராட்டப்படும். இதில் பாடல்கள் நன்றாக இருந்தபோதிலும், அதனை விட பின்னணி இசையில் விளாசியிருக்கிறார்.


பின்னணி இசையில் ஆம்புலன்ஸ் சேஸிங் காட்சிகள் மிரட்டல்.


ஒளிப்பதிவாளர்கள் ஏகாம்பரம், ரிச்சர்ட் நாதன் ஆகியோர் படத்தை ரசிக்கும்படியாக காட்சிகளை அமைத்துள்ளனர்.


thondan movie still


இயக்குனர் பற்றிய அலசல்…


டைட்டில் போடும்போதே ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களுக்கு நன்றி சொல்லி படத்தை இனிதே ஆரம்பிக்கிறார் சமுத்திரக்கனி.


ஒரு ஆம்புலன்ஸ் வேலை என்றாலும், அதற்கும் நிறைய பயிற்சிகள், முதலுதவிகள் உள்ளது என்பதை காட்சிகளாக காட்டியிருப்பது அருமை.


நிறைய காட்சிகளில் ஓவர் அட்வைஸ் செய்கிறாரோ? என எண்ணத் தோன்றுகிறது. முக்கியமாக தன் தங்கையிடம் பிரச்சினை செய்த நண்பனிடம் அட்வைஸ் செய்யும் காட்சிகள்.


தங்கள் வகுப்பு மாணவியை ஒருவன் அடித்துவிட்டான் என்பதால் அந்த கல்லூரியே திரண்டு அவனை அடிப்பது, நிச்சயம் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.


ஈவ்டீசிங் செய்ய நினைப்பவர்களும் இனி பயப்படுவார்கள்.


கெட்ட இளைஞர்களிடம் பெண்கள் படும் அவஸ்தையை ஒரு கல்லூரி காட்சியில் அருமையாக காட்டியுள்ளார்.


தொண்டன்… சமூகத்திற்கு வேண்டியவன்

0 comments:

Post a Comment