லாரன்ஸ் நடிக்கும் சரித்திர படம் : கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கிறது
24 மே,2017 - 18:01 IST
திரிஷா இல்லனா நயன்தாரா, இமைக்க நொடிகள் போன்ற படங்களை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம், அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் பிரமாண்ட ஆக்ஷன் படத்தை தயாரிக்க இருக்கிறது. இயக்குனர் ராஜமௌலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மகாதேவ் இந்த சரித்திர படத்தை இயக்குகிறார். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டு பிண்ணனியில் உருவாக இருக்கும் இந்த படத்தை ஒரு அறிமுக இயக்குனரின் திறமை மேல் நம்பிக்கை வைத்து பெரிய பொருட்செலவில் உருவாக்க இருக்கிறது கேமியோ பிலிம்ஸ்.
இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயகுமார், "எந்த ஒரு பெரிய உயரமும், சிறு அடியில் தான் துவங்குகிறது. எங்கள் படங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவும், வரவேற்பும், உற்சாகமும் தான் சிறப்பாக வேலையை செய்து முடிக்கும் ஆற்றலை எங்களுக்கு அளிக்கிறது. பாகுபலிக்கு திரைக்கதை அமைத்த விஜயேந்திர பிரசாத் இந்த பிரமாண்ட படத்துக்கும் திரைக்கதை எழுதுவது பெருமையான விஷயம். எங்கள் தயாரிப்பில் இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும்" என்கிறார்.
தற்போது கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், நயன்தாரா, அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள இமைக்கா நொடிகள் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு குறுகிய காலத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment