அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கையை காட்டும் சிவா மனசுல புஷ்பா
23 மே,2017 - 11:35 IST
விஷாலுக்கு எதிரான போராட்டங்களில் அடிக்கடி ஈடுபடுகிறவர் வாராகி. தற்போது அவர் படம் தயாரித்து அதில் நடிக்கிறார். படத்தின் பெயர் சிவா மனசுல புஷ்பா. அவருக்கு ஜோடியாக ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர டி.சிவா, தவசிராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பாலுமகேந்திராவின் உதவியாளர் அருந்தவராஜா இயக்குகிறார். நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து வாராகி கூறியதாவது: இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு, நிஜத்தில் நடந்தவை. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீபகாலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை. ஒருவருக்கொருவர் இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள், இந்தக் கதையில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும்போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும் என்றார் வாராகி.
0 comments:
Post a Comment