Tuesday, May 23, 2017

சூர்யாவுக்கு பிடிவாரண்ட்; களமிறங்கிய தல-தளபதி ரசிகர்கள்

suriyaகடந்த 2009 ம் ஆண்டு விபச்சாரத்தில் ஈடுப்படும் நடிகைகள் என ஒரு நாளிதழ் செய்தியை வெளியிட்டது.


இதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.


இதில் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக சூர்யா, சத்யராஜ், சரத்குமார், விவேக், ஸ்ரீ பிரியா, அருண் விஜய், விஜயகுமார், சேரன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்தது.


இதனையடுத்து இந்த 8 பேர் மீது ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்டை பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.


இந்த விஷயம் இணையத்தளங்களில் காட்டுத் தீயாக பரவியது.


இதனையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும், தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி, #WeSupportSuriya என ட்ரண்ட் செய்து ஆதரவளித்து வருகின்றனர்.


Non bailable arrest warrant for Tamil Actors. Ajith and Vijay fans support Suriya

0 comments:

Post a Comment