அமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'பாகுபலி 2'
23 மே,2017 - 17:01 IST
உலகம் முழுவதுமே பெரிய வசூலைப் பெற்று 1500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ள 'பாகுபலி 2' படத்தின் வசூல் அமெரிக்காவில் புதிய வசூல் சாதனையைப் படைத்தது. இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இப்படம் கடந்த ஞாயிறு முடிய 129 கோடி வசூலைக் கடந்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. 'தங்கல்' படம் 12 மில்லியன் யுஎஸ் டாலர் மட்டுமே வசூலித்திருந்தது.
'பாகுபலி 2' படம் உலக அளவில் இந்தியப் படங்களின் வசூலில் தற்போதைக்கு முதலிடத்தில் இருந்தாலும், வெளிநாடுகளில் வசூலித்த வகையில் 'தங்கல்' படத்தை விட பின் தங்கியே உள்ளது. 'தங்கல்' படம் வெளிநாடுகளில் மட்டும், சீன வசூலையும் சேர்த்து இதுவரை 148 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளது. ஆனால், 'பாகுபலி 2' படத்தின் வசூல் 45 மில்லியன் யுஎஸ் டாலர் மட்டுமே வசூலித்துள்ளது. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் சீனாவில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அப்படியே 'பாகுபலி 2' படம் அடுத்து சீனாவில் வெளியானாலும் 'தங்கல்' படம் அங்கு வசூலித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு வசூலிக்குமா என்பது சந்தேகம்தான்.
மொத்த வசூலில், வெளிநாடு வசூலில் தற்போதைக்கு 'தங்கல்'தான் முன்னணியில் உள்ளது. உள்நாடு வசூலில் 'பாகுபலி 2' படம்தான் முன்னணியில் உள்ளது. இரண்டு படங்களுமே 1500 கோடியைக் கடந்து உலக சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
0 comments:
Post a Comment