Tuesday, May 23, 2017

“சீக்கிரம் பார்த்துருங்க” ; பாவனா படத்துக்கு இயக்குனர் வைத்த கெடு..!


“சீக்கிரம் பார்த்துருங்க” ; பாவனா படத்துக்கு இயக்குனர் வைத்த கெடு..!



23 மே,2017 - 16:52 IST






எழுத்தின் அளவு:








பாவனா மலையாளத்தில் நடித்துள்ள 'அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்' படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. ஆசிப் அலி கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தை ரோஹித் என்பவர் இயக்கியுள்ளார். பல பேரிடம் தன்னை வெவ்வேறு நபராக காட்டிக்கொண்டு ஏமாற்றும் இளைஞன் ஒருவனுக்கு மெமரி லாஸ் ஏற்படுகிறது. அதன்பின் அவன் சந்திக்கும் சிக்கல்களும் டாக்டரான பாவனா மூலம் இந்தப்பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளியேறுகிறான் என்பதும் தான் கதை.

சுவாரஸ்யமாக பின்னப்பட்ட இந்த படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் கேரளாவில் இன்னும் பல தியேட்டர்களில் 'பாகுபலி-2' படம் ஓடுவதாலும் தவிர ஜெயராம் நடித்துள்ள 'அச்சாயன்ஸ்' மற்றும் டொவினோ தாமஸ் நடித்துள்ள 'கோதா' என இன்னும் இரண்டு படங்கள் ரிலீசாகி உள்ளதாலும் பாவனா நடித்த படத்திற்கு அவ்வளவாக கூட்டம் சேரவில்லை. இதனால் பல தியேட்டர்களில் காட்சிகளின் எண்ணிகையை குறைத்து, ஒன்றிரண்டு நாட்களில் படத்தையே தூக்கப்போகிறார்களாம்.

இந்த விபரத்தை தியேட்டர்கள் வாயிலாக அறிந்துகொண்ட படத்தின் இயக்குனர் ரோஹித், தனது ட்விட்டர் பக்கத்தில் அதை குறிப்பிட்டு “படத்தை பார்க்காதவர்கள், படத்தை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் எல்லாம் விரைந்து சென்று பார்த்துவிடுங்கள்.. படத்தை தூக்கப்போறாங்க” என அறிவித்துள்ளார். “நல்ல படம்.. ஆனால் போதுமான அவளவு பப்ளிசிட்டி, புரமோஷன் செய்யப்படாதது தான் இதற்கு காரணம்” என இதுபற்றி வேதனையுடன் படத்தின் நாயகன் ஆசிப் அலி கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment