Monday, May 22, 2017

ஷுட்டிங் நடந்த இடங்களில் ஹனீமூன் - நாகசைதன்யா, சமந்தா திட்டம்


ஷுட்டிங் நடந்த இடங்களில் ஹனீமூன் - நாகசைதன்யா, சமந்தா திட்டம்



22 மே,2017 - 14:53 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகை என்று சொல்ல முடியாதென்றாலும் முக்கியமான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஆனால், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிககைகளில் அவரும் ஒருவர். சென்னையைச் சேர்ந்தவர்தான் என்றாலும் தமிழை விட தெலுங்கில் சமந்தாவிற்கு வெற்றி அதிகம் கிடைத்தது. பல முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.

சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த வருடக் கடைசியில் திருமணம் நடக்கலாம் என்று செய்திகள் உலா வந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களது திருமணம் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ள இந்தத் திருமணத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

திருமணம் முடிந்ததும் நாக சைதன்யாவும், சமந்தாவும் தங்களது தேனிலவிற்கு வித்தியாசமாக திட்டமிட்டுள்ளார்களாம். அவர்கள் இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாய சேசவே' படத்தின் படப்பிடிப்பு நியுயார்க்கில் எங்கெல்லாம் நடந்ததோ, அங்கு சென்று தங்கள் காதல் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளப் போகிறார்களாம். அப்படியென்றால் அவர்கள் எப்போதிலிருந்து காதலித்து வருகிறார்கள் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment