
இரண்டாம் பாகத்தில் நடிக்க பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, 1990-2000 ஆம் ஆண்டுகளில் கோலிவுட்டில் மெலடி கிங்காக வலம்வந்த வித்யாசாகர்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சுசிகணேசன் கூறும்போது, தற்போது கோலிவுட்டில் புதிய இளைஞர்கள் இசையமைப்பாளர்களாக உருவாகி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் நான் நினைக்கும் மெலடி இசை இல்லை. எனது திருட்டு பயலே படத்திற்கு மெலடி கிங் வித்யாசாகரின் இசை பொருத்தாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாகவும், அதில் மூன்று பாடல்கள் மெலடி பாடல்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment