Friday, November 18, 2016

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா


201611181808189945_suriya-act-with-selvaraghvan-direct_secvpfசூர்யா நடிப்பில் தற்போது ‘சிங்கம் 3’ படம் உருவாகியுள்ளது. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்கள். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.


இப்படத்திற்கு பிறகு ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்னும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தனர்.


இந்நிலையில், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதற்கு முன்னதாகவே சூர்யா தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சூர்யா அறிவித்திருக்கிறார்.


சூர்யா-செல்வராகவன் இணையும் புதிய படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிட்சர்ஸ் சார்பாக பிரபு தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சூர்யா 36’ என்று அழைத்து வருகிறார்கள்.


0 comments:

Post a Comment