மாட்டிறைச்சி சர்ச்சை... பதறிப்போய் விளக்கமளித்த கஜோல்
02 மே,2017 - 15:02 IST
பாலிவுட்டின் பிரபல நடிகை கஜோல். இவர் மும்பையில் தனது நண்பரான ரயான் என்பவரின் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அந்த உணவகத்தின் ஸ்பெஷல் டிஷ், மாட்டு இறைச்சி சூப் என்று கூறப்படுகிறது. இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். கூடவே அந்த சூப் பற்றியும் மிக அருமையான சூப் என்று பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ வைரலானது. கூடவே கஜோலுக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. குறிப்பாக பா.ஜ., ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் சட்ட விரோதமாக எப்படி மாட்டிறைச்சி கிடைத்தது என்று விமர்சனமும் எழுந்தன.
இந்த பிரச்னை வேறுவிதமாக அரசியல் ரீதியாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பிரச்னை உருவாவதை உணர்ந்த கஜோல் பதறிப்போய் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நான் பகிர்ந்த வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பகிர்ந்த வீடியோவில் இருந்தது மாட்டு இறைச்சி கிடையாது, அது எருமை மாட்டின் இறைச்சி தான். இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இந்த வீடியோ, மத உணர்வுகளைப் புண்படுத்த வாய்ப்புகள் இருப்பதால் இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment