Tuesday, May 2, 2017

அகரம் அறக்கட்டளைக்கு வீட்டை தானம் தந்த சிவகுமார்


அகரம் அறக்கட்டளைக்கு வீட்டை தானம் தந்த சிவகுமார்



02 மே,2017 - 17:46 IST






எழுத்தின் அளவு:








தமிழ் சினிமாவிற்கு தனக்கென்று ஒரு பாதை வகுத்து அதில் பயணித்து வெற்றி பெற்ற நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் தான் வாழ்ந்து வந்தார்.

சிவகுமார் சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடு தான். இந்த வீட்டில் தான் சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர். இந்த வீட்டில் தான் மூவரின் திருமணமும் நடைபெற்றது. பேரன், பேத்திகள் பிறந்தது இங்கே தான். இந்த வீடு சிவகுமாருக்கு ரொம்பவே செண்டிமெண்டாக மனதிருக்கு நெருக்கமான ஒரு வீடு.

கோவிலாக நினைத்து வாழ்ந்த தனது வீட்டை இந்த சமூகம் பயன் பெற தனது அகரம் பவுண்டேஷனுக்கு தானமாக அளித்துள்ளார் சிவகுமார். அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பது சிவகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கனவு. தற்போது அந்த வீட்டை அதற்காக துவங்கப்பட்ட “அகரம் பவுண்டேஷன்“ செயல்பாடிற்கு பயன்பெற கொடுத்துள்ளார்.

திநகர் வீட்டை விட மனமில்லாவிட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டு கொண்டதால் திநகர் வீட்டில் இருந்து சிவகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தற்போது புதிதாக கட்டியுள்ள “லக்ஷ்மி" இல்லத்திருக்கு சென்றுள்ளனர்.

சூர்யா குடும்பத்தாரால் தான் அகரம் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment